| 245 |
: |
_ _ |a பாண்டவதூதப் பெருமாள் கோயில் - |
| 246 |
: |
_ _ |a திருப்பாடகம் |
| 520 |
: |
_ _ |a திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பெரிய காஞ்சி புரத்தில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் உள்ளது. பாடு - மிகப் பெரிய அகம் (இருப்பிடம்) என்ற பொருளில் பாடகம் ஆனதாகக் கூறுவர். ஸ்ரீஇராமானுஜரிடம் வாதப்போரிலே தோற்றுப்போன யக்ஞ மூர்த்தி என்னும் அத்வைதி ஸ்ரீஇராமானுஜரின் உண்மை ரூபம் தெரிந்து அவரிடமே சரணாகதியாகி அவரிடம் சீடரானார். அவருடைய பெயரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று இராமானுஜர் மாற்றி அவரை விஷ்ணுவின் தொண்டராக்கி விஷ்ணு கைங்கர்யம் செய்ய வைத்தார். இந்த அருளாளப் பெருமாள் ஜீவித்திருந்தது இந்த திவ்யதேசத்தில்தான். இங்கு அவருக்குத் தனி சன்னதியுண்டு. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய நால்வரால் 6 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளனர். நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில், பிள்ளைப் பெருமாளையங்கார் இத்தலத்தைப் பாடியுள்ளார். |
| 653 |
: |
_ _ |a கோயில், வைணவம், பெருமாள், திருமங்கையாழ்வார், திவ்யதேசம், பெரிய காஞ்சி, காஞ்சிபுரம், திருப்பாடகம், பாண்டவதூதப் பெருமாள் கோயில் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார்பாடல் பெற்ற திருப்பதி. |
| 914 |
: |
_ _ |a 12.8427151 |
| 915 |
: |
_ _ |a 79.6969514 |
| 916 |
: |
_ _ |a பாண்டவ தூதர் |
| 918 |
: |
_ _ |a ருக்மணி, சத்தியபாமா |
| 923 |
: |
_ _ |a மத்ஸய தீர்த்தம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத் திருமேனியுடன் திகழும் இவ்வெம்பெருமானை 108 திவ்ய தேசங்களில் மட்டுமன்றி இந்தியாவில் கூட வேறெங்கும் கூட சேவிக்க முடியாது. |
| 930 |
: |
_ _ |a எம்பெருமான் கிருஷ்ணவதாரத்தில் பாண்டவர்கள் பொருட்டு துரியோதனன் சபைக்கு தூது சென்றான். இந்தக் கண்ணன்தான் பாண்டவர்களின் பெரிய பலம். இவனை அழித்துவிட்டால் பாண்டவர்களை எளிதில் வென்றுவிடலாம். என்று எண்ணிய துரியோதனன், கண்ணன் அமரக்கூடிய இடத்திற் கருகில் ஒரு நிலவறையை உண்டாக்கி அதன்மீது பசுந்தலைகள் இட்டு மூடி அதன் மீது ஒரு ஆசனத்தை அமைத்தான். இதில் கண்ணன் அமர்ந்தவுடன் இந்த ஆசனம் நிலவறைக்குள் விழுக அங்கிருக்கும் மல்லர்கள் கண்ணனை கொன்றுவிட வேண்டும் என்பது துரியோதனன் திட்டம். துரியோதனன் திட்டப்படி நிலவறை சரிந்துவிழ உள்ளே விழுந்த கண்ணன் நொடிப்பொழுதில் மல்லர்களை மாய்த்து விஸ்வரூபனாய் நின்றார். பாரத யுத்தம் முடிந்த பிறகு வெகுகாலத்திற்குப் பின் ஜெனமேஜெய மகராசன் வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக்கேட்டு வரும்போது ஸ்ரீகிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் இருந்து தூது சென்றவிடத்து எடுத்த பிரம்மாண்ட திருக்கோலத்தை மாபாராதம் கை செய்த மாவுருவத்தை தானும் சேவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்குபாயம் கேட்க சத்தியவிரத ஷேத்ரமான காஞ்சிக்கு சென்று அஸ்வமேதயாகம் செய்து யாகத்தின் முடிவில் நீ விரும்பிய திருக்கோலத்தைக் காணலாமென்று முனிவர்கள் கூற மன்னன் அவ்விதமே செய்தான். யாகத்தின் திரண்ட பயனாக பிரம்மாண்டமான கண்ணன் யாக வேள்வியில் தோன்றி மன்னருக்கும் ஹாரித முனிவர்க்கும் காட்சி கொடுத்தார் என்பது வரலாறு. |
| 932 |
: |
_ _ |a கருவறையின் அமைப்பை உற்று நோக்கினால் நிலவறையின் மொத்தப்பகுதியை அப்படியே பெயர்த்து தலைக்கு மேல் குவித்து வைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் தோன்றுகிறது. மிக சிறிய அளவில் இச்சன்னதி அமைந்திருந்தாலும், கர்ப்பக்கிரஹத்தின் குவிந்த அமைப்பும், அதனடியில் பிரம்மாண்டமான திருக்கோலத்தில் எம்பெருமான் வீற்றிருப்பதும் ரசித்துப் பார்க்கத் தக்கது மட்டுமன்றி பேராச்சர்யம் தருவதுமாகும். எம்பெருமானின் நின்ற அமர்ந்த கிடந்த திருக்கோலங்கட்கு தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களே ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்ததெனச் சொல்லலாம். அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலம் என்றாலே அது ஊரகம், பாடகம், வெஃகா தான் என்று சொல்லாமல் சொல்வதைப் போலவும், எல்லோராலும் - மூன்று திருக்கோலங்கட்கு இந்த மூன்று ஸ்தலங்கள்தான் என்று அறியப்பட்டதாயும், காஞ்சி மண்ணிற்கே தனித்துவமும் முக்கியத்துவமும் பெற்றுத் தந்த தலங்களாக விளங்குகின்றது என உணர முடிகிறது. 108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்திற்கு வேங்கடமலையானையும், அமர்ந்த திருக்கோலத்திற்கு பத்ரிநாதனையும், கிடந்த திருக்கோலத்திற்கு திருவரங்கத்து அரங்கனையும் தனித்துவம் படுத்தலாமென்றிருந்தாலும் ஆழ்வார்கள், நின்ற, கிடந்த, இருந்த திருக்கோலங்கட்கு காஞ்சியில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களையே குறித்து மங்களாசாசனம் செய்துள்ளனர் என்று கொள்ளலாம். அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலமெனில் அவைகள் ஊரகம், பாடகம், வெஃகாதான் பிறவன்று என்றும் உரைக்கலாம். |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், பச்சைவண்ணப் பெருமாள் கோயில், திருவெகா, திருஊரகம், திருகார்வானம், திருக்காரகம் |
| 935 |
: |
_ _ |a காஞ்சி மாநகரிலேயே அமைந்துள்ளது. சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 938 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 939 |
: |
_ _ |a சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a காஞ்சிபுரம் நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000201 |
| barcode |
: |
TVA_TEM_000201 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000201/TVA_TEM_000201_திருப்பாடகம்_பாண்டவநூதப்பெருமாள்-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
cg103v072.mp4
TVA_TEM_000201/TVA_TEM_000201_திருப்பாடகம்_பாண்டவநூதப்பெருமாள்-கோயில்-0001.jpg
TVA_TEM_000201/TVA_TEM_000201_திருப்பாடகம்_பாண்டவநூதப்பெருமாள்-கோயில்-0002.jpg
TVA_TEM_000201/TVA_TEM_000201_திருப்பாடகம்_பாண்டவநூதப்பெருமாள்-கோயில்-0003.jpg
TVA_TEM_000201/TVA_TEM_000201_திருப்பாடகம்_பாண்டவநூதப்பெருமாள்-கோயில்-0004.jpg
TVA_TEM_000201/TVA_TEM_000201_திருப்பாடகம்_பாண்டவநூதப்பெருமாள்-கோயில்-0005.jpg
|